பி.முத்துலிங்கம். யாழ்ப்பாணம்: பி.முத்துலிங்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிறின்ரேர்ஸ், ஆஸ்பத்திரி வீதி).
xii, 156 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
பதினொரு அத்தியாயங்களில் இந்நூல் விரிந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராகப் போகிறாரா கார்ள் மார்க்ஸ் என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கும் இந்நூலின் இறுதியில் தரமான கல்வியை வழங்க பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றங்கள் அவசியம், பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் ஒரு கண்ணோட்டம், பாடசாலை முகாமைத்துவமும் உள்வாரி, வெளிவாரி மதிப்பீடும், லண்டன், லண்டன் இருப்புகளும் எண்ணங்களும், பாடசாலை மட்டக் கணிப்பீடு ஒரு கண்ணோட்டம், கனடாவின் கல்விமுறை பற்றிய அனுபவங்கள், தகவல் இணைப்புகள் ஆகிய சிறு படைப்புகளும்; இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 230190).