வே. அம்பிகைபாகன். உடுப்பிட்டி: காங்கேயன் கலைக்கோட்டம், இல. 6, போக்காலை வீதி, 1வது பதிப்பு, வைகாசி 1999. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
ix, 30 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 20.5×14.5 சமீ.
பள்ளிக்கு வெளியே இடம்பெறும் கல்வித்திட்டமான முறைசாராக் கல்விக் கோட்பாடு பற்றிய நூல். முறைசாராக் கல்வியின் இன்றைய நிலை: எமது தேவையும் பொதுப் பின்னணியும், புதிய பயிற்சி நெறிகள், பயிற்சி நெறிகளின் தொழில்முறைப் பகுப்பாக்கம், பயிற்சி நெறிகளின் பண்பும் தொழில்வலர் அணியும், பயிற்சி நெறிகளின் நோக்கமும் செயற்பாடும் ஆகியவை முதலாம் பிரிவிலும், மரத்தளபாட வடிவமைத்தற் தொழில்நுட்பம், மரச்சிற்பக் கலை, மரவேலை, பூட்டு வடிவமைத்தற் தொழில்நுட்பம், ஆகிய விடயங்கள் இரண்டாவது பிரிவிலும் விளக்கப்பட்டுள்ளன. புதிய பயிற்சி நெறிகளாக இரும்பு உருக்குத் தளபாட வடிவமைத்தற் தொழில்நுட்பம், பூட்டு வடிவமைத்தற் தொழில்நுட்பம், மரவேலை எந்திர வடிவமைத்தற் தொழில்நுட்பம், மருந்து தெளிகருவி வடிவமைத்தற் தொழில்நுட்பம், மரத்தளபாட வடிவமைத்தற் தொழில்நுட்பம், சணல்நூல் உற்பத்தியும் சாக்கு வடிவமைத்தலும், படகு, வள்ள வடிவமைத்தல் தொழில்நுட்பம், மீன்பிடி வலைப்பின்னல், மரச்சிற்பக்கலை, உலோகச் சிற்பக்கலை, ஆலய கட்டிடக் கலை, பொம்மைக் கலை, வாழ்த்து அட்டைகள் வடிவமைத்தற் கலை, தொலைக்காட்சிப் படப்பிடிப்பு, வர்த்தகச் சித்திரம் என்பவை விளக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் வடமராட்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் முறைசாராக் கல்வி செயற்றிட்ட அலுவலராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 128888).