இதழாசிரியர்கள் குழு. கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், கொழும்பு ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
(234) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.
கொழும்பு ரோயல் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் தனது 73ஆவது அகவையில் கால்தடம் பதிக்கின்ற வேளையில் 13.11.2011 அன்று கொழும்பு நவரங்கஹல மண்டபத்தில் நடைபெற்ற கலைவிழாவின்போது வழங்கப்பட்ட சிறப்பு மலர். வழமையான ஆசிச் செய்திகளுடன் மாணவர்களின் படைப்பாக்கங்களும், நிகழ்வுகளின் புகைப்படப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. இம்மலர் வெளியீட்டுக் காலப் பகுதியில் கல்லூரியின் தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியையாக ரஞ்சினி பிறேம்நாத் அவர்களும், மன்றப் பொறுப்பாசிரியராக எஸ்.ஆர்.ஜெயகுமார் அவர்களும், மன்றத் தலைவராக இ.பிரணவன் அவர்களும், செயலாளராக கு.சசிபாலனும் பணியாற்றியிருந்தனர்.