மலர்க் குழு. வவுனியா: கனகராயன்குளம் மகா வித்தியாலயம், கனகராயன்குளம், 1வது பதிப்பு, 2014. (சுன்னாகம்: ராம்நெற்.கொம், காங்கேசன்துறை வீதி).
xvii, 217 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்டதும், நெடுங்கேணி கல்விக் கோட்டத்திற்குட்பட்டதும் 1923இல் தாபிக்கப்பட்டதுமான கனகராயன் குளம் மகாவித்தியாலயத்தின் ஐந்தாவது மலராக இம்மலர் வெளிவந்துள்ளது. கல்வித்துறை சார்ந்தோரின் வாழ்த்துக்களுடன், பாடசாலைப் பதிவுகள், மலரும் நினைவுகள், மாணவர் ஆக்கம், ஆசிரியர் ஆக்கம், புலமையாளர் ஆக்கம் ஆகிய ஐந்து இயல்களில் படைப்பாக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. புலமையாளர் ஆக்கத்தில் ஆறு திருமுருகன் (இளைய தலைமுறையும் எதிர்காலமும்), எஸ்.சிவலிங்கராஜா (சமூக நோக்கில் பல்லவர்காலப் பக்தி இயக்கம்), மா.சின்னத்தம்பி (இலங்கையின் பாடசாலைக் கல்வி: ஏற்றத்தாழ்வுகளை அகற்றாமலே எட்டும் முயற்சிகள்), கே.ரீ.கணேசலிங்கம் (இலங்கையின் வெளியுறவுக் கொள்கை 2005-2010 வரை ஒரு நோக்கு), அருணா செல்லத்துரை (வன்னிப் பெருநிலப்பரப்பில் கிழக்குமூலை, மேற்குமூலை ஒரு வெட்டுமுகம்), சி.பா ஆனந்த் (உடலின் மொழி விளையாட்டு), அகளங்கன் (வேட்டை) ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.