திருமதி ரேணுகாதேவி கேசவன், செ.சத்தியநாராயணன் (மலராசிரியர்கள்). தெல்லிப்பழை: மகாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, 2010. (கோண்டாவில்: அன்ரா பிரிண்டேர்ஸ், கே.கே.எஸ். வீதி).
xxxxi, (8), 358 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×19சமீ.
கல்லூரி அதிபர் திருமதி சிவமலர் அனந்தசயனன் அவர்களை கௌரவ ஆலோசகராகவும், சு.சயந்தன், ம.மணிசேகரன், செல்வி இ.சம்பந்தர், செல்வி செ.இராஜேஸ்வரி, செல்வி வ.சுபாஷினி, திருமதி சி.சயந்தன் ஆகியோரை மலர்க்குழுவினராகவும் கொண்டு நூற்றாண்டுச் சிறப்பு மலராக, மேற்படி கல்லூரியின் மகாஜனன் ஆண்டிதழின் 35ஆவது இதழ் வெளிவந்துள்ளது. பல்வேறு ஆசிச்செய்திகளுடன் வெளிவந்துள்ள இம்மலரின் கட்டுரைகள் கல்லூரியின் காலப்பதிவுகள் (2009-2010), கல்லூரி நூற்றாண்டுப் பதிவுகள், கல்வியியலாளர்கள், கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்களின் படைப்புகள், நூற்றாண்டின் ஆவண மீள்பதிவுகள், மாணவர்களது படைப்புக்கள் (தரம் 1-5), மாணவர்களது படைப்புகள் (தரம் 6-13) ஆகிய இயல்களின்கீழ் பகுத்துத் தரப்பட்டுள்ளன.