ச.தனபாலசிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நூற்றாண்டு விழாச் சபை, யா/அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xxix, 116 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.
1910ம் ஆண்டு அமரர் விஸ்வநாதர் காசிப்பிள்ளையினால் தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணம், அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையின் நூற்றாண்டு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். கல்வித்துறையினரின் ஆசிச் செய்திகளுடன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்பாக்கங்களையும் உள்ளடக்கியது. மேற்படி பாடசாலையின் வரலாற்றுடன் அரியாலைப் பிரதேச வரலாறு பற்றிய பல்வேறு கட்டுரைகளும் காணப்படுகின்றன. இம்மலரின் தொகுப்பாசிரியர் ச. தனபாலசிங்கம், யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் பிரதான நூலகராகப் பணியாற்றி இளைப்பாறியவர். இவரும் மேற்படி பாடசாலையின் பழைய மாணவராவார்.