இ.இரத்தினம். யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் நிலையம், 1வது பதிப்பு, ஜுன் 2001. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம்).
(2), 133 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 22×15 சமீ.
களனிப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் சிறப்புப் பட்டதாரியாகப் பயின்று, பின்னர் மருதானை தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கணக்கியல் டிப்ளோமாவை பெற்றுக்கொண்ட திரு. இ.இரட்ணம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதியபாடத்திட்டத்திற்கு அமைவாக க.பொ.த. உயர்கல்வி மாணவர்களுக்கு உதவும்வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 130908).