இ.இரத்தினம். யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2000. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் பதிப்பகம்).
(3), 163 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ.
க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு வணிகக் கல்வியும் கணக்கீடும் என்ற பாடம் 2000ஆம்ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடம் 10ஆம் தரத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூல் 10ம் தரத்தின் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு இலகுவான முறையில் விளங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வணிகக்கல்வி, கணக்கீடு ஆகிய இரு பகுதிகளாக வகுத்து பாடங்களின் தொடர்புக்கேற்ப எழுதப்பட்டுள்ளது. வணிகப் பின்னணியும் சூழலும், வணிகமும் ஆவணங்களும், நிறுவன அமைப்பு/தொழில் நிறுவனங்கள், வணிக நடவடிக்கைகளுக்கு அவசியமான சேவைகள், கைமாற்றத்தக்க சாதனங்கள், நுகர்வோர் கல்வி ஆகிய 6 அத்தியாயங்கள் முதற் பிரிவிலும், தொழில் நிறுவனங்கள், நிறுவனக் கணக்கேடுகள், பேரேடு, பரீட்சை மீதி என்பன இரண்டாம் பிரிவிலும் விளக்கப்பட்டுள்ளன.(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 130920).