செ.ஜெயரங்கன், ராஜ் எஸ்.குகன். கொழும்பு 13: ராஜ் எஸ்.குகன், செ.ஜெயரஞ்சன், B1, F2, புளுமெண்டால் தொடர்மாடி, 2வது பதிப்பு, பெப்ரவரி 1996, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995. ( கொழும்பு 13: B.B.C. கிராப்பிக்ஸ், 252, ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தை).
(6), 305+21 பக்கம், விளக்கப்படம், விலை: ரூபா 225., அளவு: 20.5×14 சமீ.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வணிகப் புள்ளிவிபரவியல் என்னும் பாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் பகுதி 1ஐ இந்நூல் பூர்த்திசெய்கின்றது. வணிகப் புள்ளிவிபரங்களின் தன்மைகள், வணிகத் தரவுகளைச் சேகரித்தல், வணிகத் தரவுகளை ஒழுங்கமைத்தலும் சமர்ப்பித்தலும், வணிகத் தரவுகளை பகுப்பாய்வு செய்தலும் வியாக்கியானம் செய்தலும், நிகழ்தகவும் நிகழ்தகவுப் பரம்பலும், பிற்செலவும் இணையும் ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118491).