சு.பத்மராஜ். திருக்கோணமலை: சு.பத்மராஜ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1996. (கொழும்பு 13: ரித்தீஷ் பப்ளிக்கேஷன்ஸ், 75, கல்பொத்த வீதி).
xii, 227 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×13.5 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரவியலை ஒரு பாடமாகக் கற்று பட்டம் பெற்றவர் சு.பத்மராஜா. தனது கற்பித்தல் அனுபவத்தையும் துணைக்கொண்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்றவகையில் இந்நூலை இவர் உருவாக்கியிருக்கிறார். வணிக புள்ளிவிபரவியலின் தன்மைகள், வணிக தரவுகளைச் சேகரித்தல், வணிக தரவுகளை ஒழுங்குபடுத்தலும் சமர்ப்பித்தலும், வணிக தரவுகளின் பகுப்பாய்வும் வியாக்கியானம் செய்தலும், நிகழ்தகவும் நிகழ்தகவுப் பரம்பலும், ஆகிய ஐந்து பிரதான இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117956).