10293 வர்த்தகமும் நிதியும் (அலகு 2) : உயர்தர வகுப்புக்களுக்குரியது

தேவராஜன் ஜெயராமன். யாழ்ப்பாணம்: ஸ்ரீராம் பப்ளிக்கேஷன்ஸ், 392/2, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1993, 1வது பதிப்பு, ஏப்ரல் 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).

(3), 98 பக்கம், விலை: ரூபா 62.50, அளவு: 20.5×13.5 சமீ.

தொக்கு (Stock) அல்லது இருப்பு, களஞ்சியப்படுத்தல், மூலப்பொருள் கையாளல், தொடர்பாடல், தொலைபேசி பரிவர்த்தனை, போக்குவரத்து,  வியாபாரச் சேர்க்கை போன்ற பிரதான வர்த்தகம் சார்ந்த விடயங்களை இந்நூல் விரிவாக விளக்குகின்றது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ விரிவுரையாளராகவும், திறந்த பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 97568).     

ஏனைய பதிவுகள்