அ.ஸ்ரீஸ்கந்தராசா, வே.அழகேசன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, பெப்ரவரி 1976, 2வது பதிப்பு, பெப்ரவரி 1974, 1வது பதிப்பு, யூலை 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ.தம்பி ஒழுங்கை).
vi, 154 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21×14 சமீ.
இலங்கையில் 1972இல் அடிப்படை மாற்றத்தையுடைய கல்விச் சீர்திருத்தங்களைப் புகுத்தினர். இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகத் தொழில் முன்னிலைப் பாடநெறிகள் புகுத்தப்பட்டன. இதில் வர்த்தவியலும் ஒன்றாகும். இந்நூல், வர்த்தகவியலின் ஆறாந் தரத்துக்குரிய பொருளாதாரச் சூழலும் வியாபாரமும், இலங்கைப் பொருளாதாரமும் பிறநாடும், சில்லறை வியாபாரம், மொத்த வியாபாரம், தனி முயற்சி, கூட்டுறவு, வங்கி, விளம்பரம், வியாபாரத் தகவல்கள், போக்குவரத்து, வெளிநாட்டு வியாபாரம், பண்டகசாலை, நட்டஈடு, செயல்முறைப் பயிற்சி ஆகிய 14 பிரிவுகளின்கீழ் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117142).