மா.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 1989. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(5), 92 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 21×14 சமீ.
பட்டப்படிப்புகள் கல்லூரி வெளியீட்டு முயற்சிகளில் பதினான்காவது நூல் இது. வெளிநாட்டு வர்த்தகம் பற்றியும் அதனால் ஏற்படும் தொடர்புகள், விளைவுகள் பற்றியும் கோட்பாட்டுரீதியாகவும், நடைமுறைச் சான்றுகளினூடாகவும் இந்நூலில் விளக்கியுள்ளார். வெளிநாட்டு வர்த்தகம் சார்பான சர்வதேச நிறுவனங்களைப் பற்றியும் அவற்றின் பங்களிப்பினையும் பொருத்தமான தகவல்களுடன் எழுதியுள்ளார். மேலும் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக நிலைமைகளும், வர்த்தக கட்டமைப்புச் சார்ந்த மாற்றங்களும் அவற்றின் பாதிப்புகளும் கவனத்திற்கெடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வியாபாரம், வியாபாரக் குறிகாட்டிகள், ஏற்றுமதி வியாபாரம், இறக்குமதி வியாபாரம், இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, மூன்றாம் உலக நாடுகளின் வியாபாரமும் நிறுவனங்களும் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119459).