சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, மாசி 2009. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
xvi, 278 பக்கம், விலை: ரூபா 395., அளவு: 18.5×13 சமீ.
இந்நூல் அறிமுகம், மரணமும் மரணத்தை எதிர்கொள்ளலும் (மரணத்தை எதிர்கொள்ளல், பிராயச்சித்தம், மரணக்குறிகள், மரணம், மணமும் மரணமும், தகனம், தகனஞ்செய்யும் காலம்), பிராமணரின் மரணச் சடங்குகள்
(இறுதிச் சடங்குகள், கர்த்தா, தகனக் கிரியை, பஞ்சமி தோஷம் – தனிஷ்டா பஞ்சமி, நக்னதானம்- நக்ன சிராத்தம், பாஷாண ஸ்தாபனம், பிண்டமும் பிண்டதேகமும், அஸ்தி சஞ்சயனம், மரணத் துடக்கு, ஏழு தலைமுறையுறவு, தசாகம், பதினோராம் நாட்கிரியைகள் (நவசிராத்தம், விருஷபோத்ஸர்ஜனம், அத்யமாசிகம், பஞ்சதசமாசிகங்கள்), பாட்டிசொன்ன புராணக்கதை, மாசிக சிராத்தம், சபிண்டீகரணம், ஸோதகும்ப சிராத்தம், கிருக யக்ஞம், தர்ப்பணம், பிதுர்லோகம்), பிராமணரல்லாதோரின் மரணக்கிரியைகள்(தகனம், அந்தியேட்டி, பஞ்சமிதோஷம், காடாற்றுதல், நக்னதானம், பாஷாணபூசை, எட்டுச் செலவு, வீட்டுக் கிரியைகள், நவசிராத்தம், ஏகோத்தர விருத்திச் சிராத்தம், சம்ஹிதா சிராத்தம், இடபதானம், ஏகோதிட்ட சிராத்தம், மாசிகங்கம், சபிண்டீகரணம்), பிராமணர், பிராமணரல்லாதோரின் மரணச்சடங்குகள் : ஓர் ஒப்பீடு, மரணச்சடங்குகளில் மருத்துவ சுகாதாரம், முடிவுரை ஆகிய ஏழு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 202708).