வி.சீனிவாசகம் (மூலம்), ஆசிரியர் குழு (திருத்திய பதிப்பாசிரியர்கள்). கோலாலம்பூர்: மலேசிய இலங்கைச் சைவர் சங்கம், இல.3, Lorong Scott, Off Jalan Scott, Brickfield, 50470, Kuala Lumpur, 1வது பதிப்பு, 2005. (கோலாலம்பூர்: துனியா என்டர்பிரைஸஸ்).
viii, 83 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
ஒரு சைவரின் வாழ்வில் திருமணச்சடங்கு முக்கியமானது. சைவ சமயச்சடங்குகள் சமய அடிப்படையில் ஒரே தன்மையைக் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அதில் சமூக-வட்டாரச் சூழலுக்கேற்ப மாறுபட்ட, கூடுதலாகச் சேர்க்கப்பட்ட சடங்குக் கூறுகளும் அடங்கியிருக்கும். எனவே, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்றதொரு கையேடாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு சைவ நபரின் வாழ்க்கையில் சமயச் சடங்குகள், திருமணம்-ஒரு சைவ நபரின் வாழ்வில் மிகவும் முக்கியமான சடங்கு (சம்ஸ்காரம்), திருமணத்தை நிச்சயம் செய்தல், ஆயத்தமாகும்ஃதயாராகும் காலகட்டம், பொன்னுருக்குச் சடங்கு, திருமணச் சடங்கு ஆகிய பிரதான ஆறு இயல்களில் இவ்விடயங்கள் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலின் பின்னிணைப்புகளாக, மணவறை-மணவறை சார்ந்த இட அமைப்பு, திருமணத்திற்கான ஆயத்தவேலைகளில் முக்கியமானவை, யார் எதைச் செய்வது-ஒரு துரித கண்ணோட்டம், திருமணச் சடங்கில் முக்கியக் கட்டங்கள், யார் எதைச் செய்வது- ஒரு துரித கண்ணோட்டம், சடங்குகளுக்குத் தேவையான தட்டங்களின் பொருள்களின் பட்டியல் ஆகிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நுலாசிரியர் குழுத் தலைவியாக மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறையின் முன்னாள் தலைவி க.திலகவதி பணியாற்றியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 215450).