எஸ்.முத்துமீரான். சென்னை 14: தணல் பதிப்பகம், 39/13, ஷேக் தாவூத் தெரு, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, 2011. (சென்னை 14: ஜெம் கிராப்பிக்ஸ்).
(14), 15-127 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21×14 சமீ.
1960முதல் எழுதிவரும் சட்டத்தரணியான நூலாசிரியர் முத்துமீரான் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவர். நூற்றுக்கும் அதிகமான வானொலி நாடகங்களை எழுதியவர். 4 சிறுகதைத் தொகுதிகள், 3 கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர். நாட்டார் இலக்கிய ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர். இந்த நூல் இலங்கையின் முஸ்லிம் மக்களிடையே வழக்கிலுள்ள 35 நாட்டார் கதைகளைக் கொண்டது. குடும்பக்கதை, நகைச்சுவைக்கதை, சமூகக் கதை, காரணக்கதை, பண்பாட்டுக்கதை, நீதிக்கதை, பேய்க்கதை, உளவியல் கதை என்று பலவிதமாக அமைந்துள்ளன. கிராமிய மொழிவழக்கில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றுக்கு அடிக்குறிப்பில் பொருளும் வழங்கியிருக்கிறார்.