மீரா எஸ்.ஹரிஷ். நாவலப்பிட்டி 20650: நிர்த்ய கலாலயா, 27/1, அம்பகமுவ வீதி, 1வது பதிப்பு, 2014. (கண்டி: பாக்யா பிரின்டர்ஸ், 6/1/1/ காஸல் லேன்).
xiv, 292 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-4984-00-4.
பரத நாட்டியத்தில் முதுமாணிப் பட்டம் பெற்ற கலைஞரும் ஆய்வாளருமான மீரா எஸ்.ஹரிஷ் எழுதிய இந்நூல் ஆறு அதிகாரங்களைக் கொண்டது. மலையக மக்களை அவர்களது பண்பாட்டுப் பின்புலத்தில் நின்று அறிமுகம் செய்து, அவர்களது கூத்துக்களான காமன்கூத்து (வரலாறு, அரங்க முறைமை, ஆட்ட தொடக்கமும் நிகழ்த்துகையும், காம தகனம், உயிர் எழுப்பும் காட்சி, கூத்தின் ஒப்பனை, காமன் கூத்துப் பாடல்கள், நிழற் படங்கள்), அர்ச்சுனன் தபசு (வரலாறு, அவைக்காற்றப்படும் முறை, ஒப்பனை, இசை, வனம் புகுதல், கம்ப பூசை, பரமசிவன் கொழுவு, கம்பத்தினின்றும் இறங்குதல், நிழற்படங்கள்), பொன்னர் சங்கர் (அவைக்காற்றப்படும் முறை, ஒப்பனை, வனக்கிளி, சங்கர் வேட்டை, பொன்னர் – சங்கர் திருமணம், நிழற் படங்கள்) முதலான கூத்துக்களை விபரித்து ஒப்பீடு செய்கிறது இந்நூல். இந்நூலில் பல நிழற்படங்களைச் சேர்த்திருப்பது நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றது. நூலாசிரியர் தமிழ்நாடு, திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் தமது குடும்ப சகிதம் கண்டி மாநகரை வசிப்பிடமாகவும் ஆக்கிக் கொண்டவர்.