மு.அருளம்பலம் (புனைபெயர்: ஆரையூர் அருள்). கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (கொழும்பு 11: S.N.M.R. கிராப்பிக்ஸ், 30, மயூரி ஒழுங்கை).
(10), 68 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955- 0195-11-4.
நாட்டார் இலக்கியக்கூறுகளை அறிமுகம் செய்யும்வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைகள், விடுகதைகள், பழமொழிகள், கதைப்பாடல்கள் எனப் பல்வேறு கூறுகளுள் நாட்டார் பாடல் பற்றி இந்நூல் விரிவாகவும், பிற கூறுகளை சுருக்கமாகவும் விபரிக்கின்றது. நூலாசிரியர் முத்துத்தம்பி அருளம்பலம் கிழக்கிலங்கையின் நாட்டுக்கூத்துத்துறையில் அகலக்கால் பதித்த ஒரு கலைஞர். கணித ஆசிரியராக இருந்து பாடசாலை அதிபராக உயர்ந்த பணிக்காலத்திலும், அதன் பின்னரும் இவர் வழங்கிய கலை இலக்கியப்பணி குறிப்பிடத்தக்கது. இந்நூல் புரவலர் புத்தகப் பூங்காவின் 32ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது.