சிவஞானம் மகேந்திரராஜா, சத்தியபாமா மகேந்திரராஜா. திருக்கோணமலை: சிவஞானம் மகேந்திரராஜா, மாவட்ட கலாசார உத்தியோகஸ்தர், 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: சி.சிவபாலன், வானவில் பதிப்பகம்).
56 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ.
கிராமியக்கலைகள் பற்றிய பாடல்களின் தொகுப்பு. இறுவெட்டுடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. கணபதி-பிள்ளையார் பாடல், நாராயணன் பாடல், முருகன் பாடல், அம்மன் பாடல், நாகதெய்வம் பாடல், இறைதுதிப் பாடல், உழவுப் பாடல், அருவிவெட்டுப் பாடல், மீனவர் பாடல், குடும்பப் பாடல், தாலாட்டுப் பாடல், ஊஞ்சல் பாடல், கும்மிப் பாடல், காவடிப் பாடல், கரகாட்டப் பாடல், காதல் பாடல், ஒப்பாரிப் பாடல், சிறுவர் பாடல், அறவழி நிற்போம், திருக்கோணேஸ்வரர் காவியம், ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் காவியம், துர்க்கை அம்மன் காவியம், பத்தினி அம்மன் காவியம், கீசகன் வதை வடமோடிக்கூத்து ஆகிய 26வகைப் பாடல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.