துரை மனோகரன். கொழும்பு 7: இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், 98 வோட் பிளேஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2 காலி வீதி, வெள்ளவத்தை).
xvi, 338 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22.5×14.5 சமீ.
நூலாசிரியர் 1983-86 காலப்பகுதியில் தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய வேளையில் பள்ளு இலக்கியத்தை சமூகவியல் நோக்கில் ஆராய்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இவ்வாய்வின் நூலுருவே இதுவாகும். தோற்றுவாய் (பள்ளு இலக்கியத்தின் தோற்றம், பழந்தமிழ் நூல்களும் பள்ளு இலக்கியமும், பள்ளு இலக்கியமும் பிறதுறைத் தொடர்புகளும், பள்ளு இலக்கியத்தின் வளர்ச்சியும் தேக்கமும்), பள்ளு இலக்கியத்தின் அமைப்பு (பள்ளு-அமைப்புக் கூறுகள், பள்ளு இலக்கியமும் பாட்டுடைத் தலைவர்களும், பள்ளு இலக்கியத்திற் பாத்திர அமைப்பு, பள்ளு இலக்கியமும் சில தனித்துவக் கூறுகளும், பள்ளு இலக்கியமும் புலப்பாட்டுத் திறனும், ஈழத்துப் பள்ளு நூல்களும் இலக்கியப் போக்குகளும், தமிழக-ஈழத்துப் பள்ளு நூல்கள்: பொது ஒப்பீடு), பள்ளரின் சமூக நிலையும் பள்ளு இலக்கியத்தில் அதன் புலப்பாடும் (சாதியும் கிராமிய அமைப்பும், பள்ளர்-பெயர்க் காரணமும் பிரிவுகளும், பள்ளரின் தோற்றம் பற்றிய கருத்துக்கள், பள்ளரின் சமூகத்தரம், ஈழத்திற் பள்ளர் சமூகம், பள்ளரின் குடியிருப்புகள், பள்ளரின் அடிமைநிலை, உணவுப் பழக்கங்கள், பள்ளரும் வேளாண்மைத் தொழிலும், பள்ளரின் கூட்டுணர்வு, பள்ளர் சமூகமும் பாத்திர வர்ணிப்பும், பள்ளர் சமூகம் மீதான அனுதாப உணர்வு), பண்ணைக்காரர்-பள்ளர் உறவுகள் (பண்ணைக்காரரின் பாத்திரச் சித்திரிப்பு, பண்ணைக்காரரின் கடமைகளும் அதிகாரங்களும், பண்ணைக்காரர் மனப்பாங்கும் பண்ணை அடிமைகளின் சார்புநிலையும், பண்ணைக்காரரின் முறைகேடுகள், பண்ணையடிமைகளின் எதிர்ப்புணர்வுகள்), பள்ளு இலக்கியத்திற் பள்ளரின் குடும்ப உறவுகள் (பள்ளு இலக்கியம் காட்டும் குடும்ப அமைப்பு, குடும்ப உறுப்பினரின் நிலைப்பாடுகள், சக்களத்திப் போராட்டம், சக்களத்திப் போராட்டத்திற் கணவனின் நிலைப்பாடு, சக்களத்திப் போராட்டம்-படிமுறை வளர்ச்சி, சக்களத்திப் போராட்டம் இடம்பெற்றமைக்கான காரணங்கள்), பள்ளு இலக்கியத்திற் சமய வழிபாடுகளும் சமூக நம்பிக்கைகளும் (பள்ளு இலக்கியமும் சமயச் சார்பும், பள்ளு நூல்கள் காட்டும் பெருந்தெய்வ-சிறுதெய்வ வழிபாடுகள், பள்ளு நூல்கள் காட்டும் சமூக நம்பிக்கைகள், வேளாண்மையும் நம்பிக்கையுணர்வும், குடும்பம் தொடர்பான நம்பிக்கைகள், தனிமனிதர் தொடர்பான நம்பிக்கைகள்) ஆகிய ஆறு இயல்களில் இவ்வாய்வு நூலுருக்கண்டுள்ளது.