10312 பிரயோக சிங்கள மொழிக் கையேடு.

சிட்னி மாகஸ் டயஸ், முஹம்மத் மஹ்பூப். ஆனமடுவ: தோதென்ன பப்ளிஷிங் ஹவுஸ், உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2015. (கனேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிரப்பிக்ஸ், 52 A/1, கலஹிடியாவ).

viii, 92 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 400., அளவு: 25×18.5 சமீ., ISBN: 978-955-1848-61-3.

இலங்கைத் தேசிய மொழிகளில் ஒன்றான சிங்கள மொழியை தமிழ்பேசும் சமூகம் இலகுவில் கற்றக்கொள்ள வேண்டும் என்ற ஒரு நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர் மிகச் சரியாகவும் சிக்கலின்றியும் அம்மொழியைத் தமிழ்மூலம் சயமாகக் கற்றுக்கொள்ள இந்நூல் படிமுறையில் வழிமைத்துள்ளது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 68816). 

ஏனைய பதிவுகள்

11643 நீ (கவிதைத் தொகுப்பு).

கவிஞர் அபூபக்கர் (இயற்பெயர்: A.M.அபூபக்கர்). காத்தான்குடி 2: முனீரா பப்ளிக்கேஷன்ஸ், 86, ஓல்ட் ரோட், 1வது பதிப்பு, அக்டோபர் 1981. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்). 72 பக்கம், விலை: ரூபா 5., அளவு:

12862 – திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை.

தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (14), 248 பக்கம், புகைப்படங்கள், விலை: