சு.சுசீந்திரராஜா (மூலம்), க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxiv, 220 பக்கம், அட்டவணைகள், விலை: இலவசம், அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9233-36-7.
தற்காலத் தமிழ் அகராதியில் வேண்டாத சொற்களா?, தமிழ்நாட்டுத் தற்காலத் தமிழில் இலங்கைத் தமிழருக்குப் புரியாத சொற்களின் வகையும் தொகையும், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் இலங்கைச் சொற்களின் பொருளும் பொதுத் தமிழ்ச் சொற்களின் இலங்கைப் பொருளும், தமிழ் லெக்சிக்கன் யாழ்ப்பாண வழக்கெனக் கூறும் வினைச்சொல் வினைச்சொற்பொருள் ஆகியவற்றுள் வழக்கொழிந்தவை, தமிழ் லெக்சிக்கனில் உள்ள யாழ்ப்பாணத்துச் சொற்கள் பிரதிபலிக்கும் தேசப்பழமை, தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் முறைப் பெயர்கள் அங்கு உண்டு – இங்கு இல்லை, இங்கு உண்டு – அங்கு இல்லை, இலங்கைத் தமிழில் பனைக்கலாசாரச் சொற்களின் பெருக்கம், தமிழ் அகராதியில் ஆங்கிலச் சொற்கள், போர் என்ற வினைச்சொல், கொன்றை வேய்ந்தனா? கொன்றை வேந்தனா?, கோவில் , கோயில்? கோயில் , கோவில்?, சிங்களத்தில் பிட்டு, யாழ்ப்பாணத்தின் பழைய பெயர், மார் என்ற பலர்பால் விகுதியின் தற்காலப் பயன்பாடு, சேனாவரையர் விலக்கிய உகரச்சுட்டு, இன்றுவரை இலங்கை வழக்கில், நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம்-மேலும் ஒரு குறிப்பு, இலங்கையில் திருப்பொற்சுண்ணப் பதிகத்திற்கு எற்பட்ட கதி ஏனையவற்றிற்கும்?, தனிநாயக அடிகளாரின் தனிச் சிறப்பு, இலங்கையில் இரவல் என்பதன் நடைமுறைச் சொற்பொருள், தமிழ் எழுத்துக்களின் உறுப்புப் பெயர்கள் – மேலும் ஒரு குறிப்பு, மனிதன் என்ற சொல்லின் பிற வடிவங்கள் ஆகிய 21 தலைப்புகளில் ஆசிரியர் எழுதிய மொழியியல் கட்டுரைகளின் தொகுப்பு.