மருதூர் ஏ.மஜீத். சாய்ந்தமருதூர் 03: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436, பழைய சந்தை வீதி, 1வது பதிப்பு, மே 2012. (மருதானை: U.D.H.Compuprint அச்சகம்).
(10), 121 பக்கம், விலை: ரூபா 290., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-1058-08-1.
50 ஆண்டுகளுக்கு மேல் தீவிர எழுத்துப்பணி புரிந்துவரும் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பதினைந்தாவது நூல். தமிழைச் சாகாமல் காக்கவும், செம்மொழியாகப் பேணவும் நாம் என்ன செய்யவேண்டும், தமிழ்மொழியும் அதில் செய்யவேண்டிய சீர்திருத்தமும், தனித்தமிழ் மொழி சாத்தியமா என்பன போன்ற விடயங்களை 10 இயல்களுக்குள் விளக்கியுள்ளார். பிரபஞ்சம், உலகம், மனிதன், மொழி, தோற்றமும் வளர்ச்சியும் என்ற முதலாவது அறிமுகக் கட்டுரையைத் தொடர்ந்து, மொழிகளின் சுருக்க வரலாறு, தமிழ் மொழியின் பூர்வீக வரலாறு, தமிழ்மொழியும் அதன் செம்மொழி அந்தஸ்தும், விழலுக்கிறைத்த நீரான தமிழ் மொழி மாநாடுகள், தமிழைச் சாகாமல் காக்கவும் செம்மொழி ஆக்கவும் நாம் என்ன செய்யவேண்டும்?, தமிழ் மொழியும் அதில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களும், தனித்தமிழ் சாத்தியமா?, தமிழ்மொழி கொலையாளிகளின் பட்டியல், இன்னும் சில பட்டியல்கள் என மொத்தம் பத்து இயல்களில் தமிழ்மொழியின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு என்ன செய்யவேண்டும் எனத் தனது கருத்தைக் கூறுகின்றார்.