10316 இலக்கணம்: வினா விடை.

சி.ஜெகன். வவுனியா: எஸ்.ஜெகன், ஆசிரியர், கலைமகள் மகா வித்தியாலயம், நெளுக்குளம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (வவுனியா: ஜே.ஏ.எஸ். அச்சகம்).

x, 190 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழில் 30 புள்ளிகளை பெற்றுக்கொள்ள இலக்கண அறிவு அவசியமாகும். இப்பகுதிக்கு விடை எழுதத் திணறும் மாணவர்களின் நன்மை கருதி இந்நூல் வினா விடை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சையின் இலக்கணப் பகுதியில் 20 வினாக்கள் பல்தேர்வு வினாக்களாகவும், 5 வினாக்கள் குறுவினாக்களாகவும் இடம்பெறுவதுண்டு. அவ்வினாக்களை சுயகற்றலுடன் துணிந்து இலகுவாக எதிர்கொள்ள ஏற்றவகையில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. சுருக்கம், கிரகித்தல் பற்றிய விளக்கங்களும்,  பயிற்சிகளும் உள்ளடங்குகின்றன. இலக்கணப் பகுதி முழுமையையும் உள்ளடக்கிய குறுவினாக்களும் 500 பல்தேர்வு வினாக்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.  இதனால் இந்நூல் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் இலக்கணம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. முதல் எழுத்து, சார்பெழுத்துக்களை முறையாக எழுதுதல், குறியீடுகளைச் சரியாகப் பயன்படுத்துதல், புத்தாக்கங்களை மேற்கொள்ளுதல் என்பவற்றுக்கு சிறந்த வழிகாட்டலை இந்நூல் வழங்குகின்றது. மேலும் எழுத்தியல், பதவியல், சொல்லியல், வினையியல், யாப்பியல் ஆகியன இந்நூலில் வினா-விடை மூலமாக எளிமையாக மாணவர்கள் விளங்கிக் கொள்ளும்வகையில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்