ரா.ப.அரூஸ். கொழும்பு: ரா.ப.இன்டர்நெஷனல் லிமிட்டெட், த.பெ.எண் 21, தெகிவளை, 2வது பதிப்பு, மார்ச் 2014, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (கொழும்பு: ரா.ப. இன்டர்நெஷனல்).
(6), 178 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 21.5×14.5 சமீ.
தமிழ் இலக்கணம், மொழிவளமும் ஆக்கத்திறனும், மாதிரி வினா-விடைகள், சுருக்கம் எழுதுதல், சிறந்த கட்டுரை எழுதுவது எப்படி?, மாதிரிக் கட்டுரைகள், கடிதம், அறிக்கை, துண்டுப் பிரசுரங்கள் எழுதுதல் எனப் பல்வேறு விடயங்களையும் பாடத்திட்டத்திற்கு அமைவாக உள்ளடக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அணிகள், வேற்றுமைகள், தொகைநிலைத் தொடர்கள், தொகாநிலைத் தொடர்கள், சொற்புணர்ச்சி, பதம், இயல்பு வழக்கும் தகுதி வழக்கும், சொல் வகைகள், எச்ச வினை, வினை முற்றுக்கள், வாக்கிய வகைகள், எதிர்க் கருத்துச் சொற்கள், தொடர்மொழிக்கு ஒரு மொழி, மரபுத் தொடர்கள்ஃஇலக்கணத் தொடர்கள், கலைச் சொற்கள், பிறமொழிச் சொற்கள், மரபுப் பெயர்கள், பழமொழிகள், ஒருசொல் பல பொருள், தொகைப் பெயர்கள், இணை மொழிகள், உவமைத்தொடர்கள், அருஞ்சொற்றொடர்கள் ஆக்கத்திறன் ஆகிய 24 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68163).