சி.கணேசையர் (பதிப்பாசிரியர்). மயிலிட்டி தெற்கு: நா.பொன்னையா, ஈழகேசரி, 1வது பதிப்பு ஜனவரி 1938. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xxxi, 428+65 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 22×14 சமீ.
தொல்காப்பிய முனிவரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் சொல்லதிகார மூலமும் சேனாவரையர் உரையும், மகாவித்துவான் புன்னாலைக்கட்டுவன் பிரம்மஸ்ரீ சி.கணேசையர் அவர்களின் உரைவிளக்கக் குறிப்புகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில் சொல்லதிகாரத்தின் பகுதிகளான கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் ஆகியவையும், பின்னிணைப்பாக சூத்திர அகராதி, உதாரண அகராதி, விஷய அகராதி, அரும்பத விளக்கம், விளங்காமேற்கோளில் விளங்கியன, அநுபந்தம் என்பனவும் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 80718).