10320 தொல்காப்பியம்: பொருளதிகாரம்: இரண்டாம் பாகம்.

சி.கணேசையர் (பதிப்பாசிரியர்). மயிலிட்டி தெற்கு: நா.பொன்னையா, ஈழகேசரி, 1வது பதிப்பு ஜனவரி 1943. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xxiv, 760 + 32 பக்கம், விலை: ரூபா 9.00, அளவு: 21×13.5 சமீ.

தொல்காப்பிய முனிவரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பின்னான்கியல்களும் பேராசிரியமும் மகாவித்துவான் புன்னாலைக்கட்டுவன் பிரம்மஸ்ரீ சி.கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய  உரைவிளக்கக் குறிப்புகளோடும் இடம்பெற்றுள்ளது.  பொருளதிகார மூலத்தின் உள்ளடங்கலாக மெய்ப்பாட்டியற் சுருக்கம், மெய்ப்பாட்டியல், மெய்ப்பாட்டியல் உதாரணச் செய்யுளுரை, உவமவியற் சுருக்கம், உவமவியல், உவமவியல் உதாரணச் செய்யுளுரை, செய்யுளியல், மரபியல் ஆகியவற்றுடன் பின்னிணைப்புகளாக சூத்திர முதற்குறிப்பகராதி, உதாரண அகராதி, அரும்பத முதலியவற்றின் அகராதி என்பனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87003).  

ஏனைய பதிவுகள்