சச்சி மாஸ்டர் (இயற்பெயர்:க.சத்தியானந்தசிவம்). யாழ்ப்பாணம்: க.சத்தியானந்தசிவம், 40, ஈச்சமோட்டை வீதி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்).
(2), 40 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20.5×14 சமீ.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிற் பரீட்சை மாணவர்களுக்கும் 6,7ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் ஏற்றது. ஆலய வழிபாடு, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், சோம்பல் மிகக் கெடுதி, காலை எழுந்தவுடன் படிப்பு, சத்துணவு, உழைப்போம் உயர்வோம், தன் கையே தனக்குதவி, என் தாய் மொழி, வருமுன் காப்போம், கந்தையானாலும் கசக்கிக்கட்டு, சனசமூக நிலையம், நானும் ஒரு கிளியானேன், முக்கனிகளில் முதற்கனி, எனது வகுப்பாசிரியை, பாப்பாவுக்கு பாட்டுப் பாடிய பாரதி, மழைநாள், ஆலமரத்தின் சுயசரிதை, பூக்கள், நத்தார் திருநாள், பட்டிப் பொங்கல், குளத்தில் நீராடினேன், எனது சிறிய தோட்டம், நான் வளர்க்கும் பூனைக்குட்டி, நாய் தன் கதை சொல்கிறது, விளையாடுவோம், அன்பு, முற்றத்து ரோசா, மாலைப்பொழுது, வீட்டு வேம்பு, எனக்குக் கிடைத்த புதிய பத்தகம், கிராமத்தில் ஒரு வாரம், அன்னை திரேசா, பகிர்ந்து வாழ்வோம், அண்ணா கண்ட கனவு, தந்தை தாய் பேண், பனமரம், தெருவில் கிடந்த பணப்பை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 37 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மூன்று கட்டுரைகள் தவிர எஞ்சியவை அனைத்தும் செறிவுள்ள ஒருபக்கக் கட்டுரைகளாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 102014).