10329 ஈழத்தின் முதலாவது வானசாஸ்திர நூல்: கிரகசார எண்ணல் கி.பி.1506.

ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(8), 52 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-8354-60-5.

ஞானம் பதிப்பகத்தினரின் ‘ஈழமும் தமிழும்’ என்ற தொடரில் மூன்றாவதாக வெளியிடப்பட்டுள்ள ஆவணநூல் இதுவாகும். 37ஆவது ஞானம் வெளியீடாக வெளிவந்துள்ளது. கி.பி.1506இல் மொழிபெயர்க்கப்பட்ட ‘கிரகசார எண்ணல்’ என்ற நூலானது வரலாற்றுப் பதிவிலிருந்து அழிந்துபோகாமல் மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஈழத்து நூல் வரலாற்றில் இதுவரை பதிவுக்குள்ளாகியிராத இந்நூல் பற்றிய குறிப்புகளை வட்டுக்கோட்டை செமினரியில் அதிபராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிய ஹொய்சிங்டன் (H.R.Hoisington) தனத மாணவர்களுக்காகச் செய்த ‘சோதிசாஸ்திரம்’ என்னும் நூலிலிருந்து பெற்று, அதன் மூல வரலாற்றை நுணகி ஆராய்வதினூடாக 500 வருடங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கும் ஈழத்துச் சோதிடப் பாரம்பரியத்தின் வரலாற்றைப் பற்றிய முக்கிய குறிப்புகளைத் தந்து ஈழத்தின் சோதிடசாத்திர நூல்களின் வரலாற்றின்மீது புதிய ஒளியைப் பாய்ச்சியிருக்கிறார். ஞானம் சஞ்சிகையின் அசிரியர் தி.ஞானசேகரனின் மகனான பாலச்சந்திரன் இந்நூலின் ஆசிரியராவார்.  ஏற்கெனவே இத்தொடரில் யாழ்ப்பாண மன்னர் நிறுவிய தமிழ்ச்சங்கம், சைமன் காசிச்செட்டியின் அகராதி முயற்சிகள் ஆகிய இரு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்