செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 1வது பதிப்பு, நவம்பர் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி)
(5), 32 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 21×14 சமீ.
அறிவியல் நூல்வரிசையில் ஸ்ரீலங்கா புத்தகசாலையின் 3வது நூலாக வெளிவந்துள்ளது. ஞாயிற்றுத் தொகுதி (1979), சூரியனின் கதை (1986), பூமியின் கதை (1986) என்ற வரிசையில் ஆசிரியர் எழுதியுள்ள இந்நூல், விரிந்துவரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்தவைத்திருக்கவேண்டும் என்ற நோக்கில் மாணவர்களுக்கேற்ற அடிப்படை அறிவியலைப் புகட்டும் வகையில் அமைந்துள்ளது. சந்திரன்-துணைக்கோள், சந்திர ஆய்வு, சந்திரனின் பிறப்பு, சந்திர மேற்பரப்பின் சூழல், சந்திரனின் தரைத்தோற்றம், மலைத் தொடர்கள், எரிமலை வாய்கள், ஓடைகள், ஒளிப்பட்டைகள், எரிமலைகளின் தோற்றம், சந்திரப் பாறைகள், சுற்றுகை, சுழற்சி, சந்திரனின் தோற்றங்கள், கிரகணங்கள், வற்றுப் பெருக்கு ஆகிய உபதலைப்புகளின் கீழ் விளக்கப்படங்கள் சகிதம் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.