ஜே.சி.என்.ராஜேந்திரா. வவுனியா: கலாநிதி ஜே.சி.என்.ராஜேந்திரா, முதுநிலை விரிவுரையாளர், பௌதிகவியல், வவுனியா வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2009.( கொழும்பு 12: குமரன் அச்சகம், 361, ½ டாம் வீதி).
(10), 127 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 375., அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-955- 51404-0-9.
சடமும் கதிர்ப்பும் பற்றிய முக்கிய பௌதிகவியல் எண்ணக்கருக்களை கற்க விரும்புவோருக்கான நூல். அறிமுகம், மின் காந்த கதிர்ப்புகளும் அலைகளும், கரும்பொருட் கதிர்ப்பு, ஒளிமின் விளைவு, சடத்தின் அலை இயல்பு, எக்ஸ் கதிர்கள், கதிர்த் தொழிற்பாடு, கருச்சக்தி ஆகிய எட்டு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தர பாடத்திட்டத்தின்அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதுடன் நவீன பௌதீகத்தினதும் கருப் பௌதிகத்தினதும் அடிப்படை விடயங்களையும் விபரிக்கின்றது. சடமும் கதிர்ப்பும் சம்பந்தமானஅடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் கொள்கைகள்பற்றிய தர்க்கரீதியானதும் தெளிவானதுமான அறிமுகத்தை வழங்குகின்றது. இது பற்றிய விளக்கங்களை மேலும் விருத்திசெய்துகொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் தொழிற்துறை சார்ந்த பிரயோகங்கள் போதுமான அளவில் இந்நூலில் தரப்பட்டுள்ளன. அலகுகள் ஒவ்வொன்றின் முடிவிலும் எண்ணக்கருக்களையும் கொள்கைகளையும் விளங்கிக்கொள்ளும் வகையில் வினாக்களும் விடைகளும் தரப்பட்டுள்ளன. ஜெ.சி.என். ராஜேந்திரா 1981இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தைப் பெற்றவர். 1991இல் பிரித்தானிய சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தின் கலாநிதிப்பட்டத்தை பௌதிகத்திற்காகப் பெற்றவர்.