எஸ்.ஆர்.டி.ரோசா (சிங்கள மூலம்), ஏ.எச்.எம்.மர்ஜான் (தமிழாக்கம்). கொழும்பு 12: வைத்திய கலாநிதி ஏ.எச்.எம்.மர்ஜான், 236 மெசெஞ்சர் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(14), 164 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 330., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-50987-2-4.
க.பொ.த. (உயர்தர) பௌதிகவியல் பாடத்திட்டத்தில் தேர்ச்சியும் அனுபவமும் பெற்ற கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் Dr. S.R.D, Rosa அவர்களின் Mechanics And Waves and Oscillations என்ற சிங்கள நூலின் தமிழாக்கம். உயர்தர பௌதிகவியல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், பௌதிகவியல் அடிப்படைக் கொள்கைகளை விளக்குவதுடன் அதனுடன் தொடர்புபட்ட செய்முறைப் பிரயோகங்கள், வாழ்க்கையில் இக்கோட்பாடுகள் உபயோகிக்கப்படும் விதம் பற்றிய அறிவை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. கோண இயக்கம், சடத்துவத் திருப்பம், மையநோக்க விசையும் மையநீக்கு விசையும், கோண உந்தம், பேணூலியின் தத்துவம், திணிவும் சக்தியும், எளிமை இசை இயக்கம், தொப்லர் விளைவு, ஒலியின் இயல்புகள், அடிப்படைக் கணிதம் ஆகிய 10 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 225750).