மீனா தர்மரெத்தினம், ஏ.எம்.றியாஸ் அகமட் (இணையாசிரியர்கள்). மருதமுனை 01: புதுப் புனைவு, 36, எஸ்.எம்.வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 215 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-5257-0-3.
Biological Diversity and Us என்ற ஆங்கில உப தலைப்புடன் எழுதப்பட்டுள்ள நூல். உயிர்ப் பல்வகைமை பற்றிய அறிமுகம், உயிர்ப் பல்வகைமை பற்றிச் சிந்தித்தல், அதன் கூர்ப்பு-தேய்வு-அழிவு, அதன் முக்கியத்துவம், உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாத்தல், இலங்கையில் உயிர்ப் பல்வகைமை ஆகிய விபரங்களை விளக்குவதாக முதலாம் இயல் அமைந்துள்ளது. உயிர்ப் பல்வகைமை என்றால் என்ன என்ற இரண்டாம் இயலில் உயிர்ப் பல்வகைமையின் வரைவிலக்கணம், அதன் மட்டங்கள், அதனை அளவிடல், பரம்பரையலகு பல்வகைமை, அதனை அளவிடல், இனப்பல்வகைமை, பல்வகைமைச் சுட்டி, பரம்பரைக் கோலங்கள், உள்நாட்டுக்குரிய இனங்கள், இடம்பெயரும் இனங்கள், இனப்பெருக்கல், தகாத காலநிலையைக் கடத்தல், உயர் பாகுபாட்டலகு பல்வகைமை, சூழல் தொகுதி பல்வகைமை, அதனை அளவிடல், நிலம் சார் உயிர்க்கோளங்கள் ஆகிய விடயங்களைக் கொண்டதாக இரண்டாம் இயல் அமைகின்றது. மூன்றாம் இயலில் உயிர்ப் பல்வகைமையின் வரலாறு பற்றியும், நான்காம் இயலில் உயிர்ப் பல்வகைமை ஏன் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கான பதிலும், ஐந்தாம் இயலில் உயிர்ப் பல்வகைமையின் பாதுகாப்பும் முகாமைத்துவமும் பற்றியும், ஆறாம் இயலில் இலங்கையில் உயிர்ப்பல்வகைமை பற்றியும் இறுதி இயலான ஏழாம் இயலில் விவசாய உயிர்ப்பல்வகைமை பற்றியும் எதிர்கால அச்சுறுத்தல்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58349).