கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன். யாழ்ப்பாணம்: காந்தளகம், 213, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்கழி 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).
vi, (2), 168 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 15., அளவு: 18×12.5 சமீ.
பறவைகளே.
கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன். சென்னை 600 002: காந்தளகம், 834 அண்ணா சாலை, 2வது பதிப்பு, மார்கழி 1990, 1வது பதிப்பு, மார்கழி 1980. (சென்னை: காந்தளகம்).
(8), 142 பக்கம், சித்திரங்கள், சுட்டி, விலை: இந்திய ரூபா 15., அளவு: 17.5×12 சமீ.
மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்கள் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்திட்ட அலுவலராக தவாகி-ஏடன் நாட்டில் பணியாற்றிய வேளையில் தனது தந்தையாரின் எழுபதாவது அகவை நிறைவின் நினைவாக வெளியிட்டிருந்த கட்டுரைத் தொகுப்பு இதுவாகும். இக்கட்டுரைகள் முன்னதாக கொழும்பு வீரகேசரி ஞாயிறு இதழில் தொடராக வெளிவந்தது. இதன் இரண்டாவது பதிப்பை, தனது தந்தையாரின் எண்பதாவது அகவை நிறைவின் நினைவாக 1990இல் வெளியிட்டிருந்தார். வரப்பெல்லாம் நாரைகள், உள்ளத்தின் உணர்வில் புள்ளினங்கள், சைபீரியா முதல் வேடந்தாங்கல் வரை, சிலம்பு பூண் காதை, மணம் மலிந்த நன்மாதம், காதற் கோலங்கள் கவர்ச்சிப் பாலங்கள், தூக்கணாங் குருவிக்கூடு, முட்டையா கோழியா முதலில் வந்தது, மாரியில் மகப்பேற்று மனைகள், இயல்புகள் ஏழின் இணைவு, ஆலோலம் பாடும் வாலைக்குமரி, மாடு மேய்ச்சான் கொக்கு, புள்ளினங்கள் ஆள்-புலங்கள், பறக்கவேண்டும் இறக்கை, தென்திசை ஆடி வடதிசை ஏகி, அறிவியல் திறமை அளவிடல் புலமை, விருந்துச் செய்திதரும் காகம், காற்று வாழ்வுக்கு ஏற்ற மாற்றங்கள், எச்சம் தரும் பொருள் மிச்சம், ஊடற்கண் அன்றிக் கூடக் கூவுவாய், பஃறுளி ஆறு பன்மலை அடுக்கம், காலத்தின் சுவடு கல்நண்டு, இதுதான் எங்கள் உலகம் ஆகிய 23 தலைப்புகளில் எழுதப்பட்ட பன்முகக் கட்டுரைகள் இவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2042).