ஆ.பேரின்பநாதன். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1B, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
(14), 68 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1162-22-1.
யாழ்ப்பாணம், ஆறுகால்மடத்தடியில் வசிக்கும் வைத்திய கலாநிதி ஆ.பேரின்பநாதன் வடபகுதியில் பல வைத்தியசாலைகளில் பணியாற்றியவர். இந்நூலில் உலகில் புகைப்பவர்களின் இன்றைய நிலை, புகையிலையும் புகைப்பழக்கமும், புகையிலையின் நஞ்சான நிக்கோட்டினின் விளைவுகள், புகைத்தல் பற்றிய அறிஞர்களின் ஆய்வுரைகள், புகைப்பதால் ஏற்படும் உயிர்க்கொல்லி நோய்கள், உயிர்க்கொல்லிக்கு விளம்பரமா?, தன் நெஞ்சே தன்னைச் சுடும், புகைப்பதை எப்படி நிறுத்தலாம், புகைப்பான்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? ஆகிய ஒன்பது தலைப்புகளில் இந்நூல் புகைத்தல் பற்றிய சுகாதாரத் தகவல்களைக் கொண்டுள்ளது.