க. பஞ்சலிங்கம். யாழ்ப்பாணம்: க.பஞ்சலிங்கம், ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி அச்சகம்).
55+39 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.
முதல் 55 பக்கங்கள் தமிழிலும், பின்னைய 39 பக்கங்கள் Inner Glory: Yoga Practices for Adults and Elders என்ற ஆங்கிலத் தலைப்பின் கீழ் ஆங்கிலத்திலுமாக, இருமொழி நூலாக வெளிவந்துள்ளது. யோகாசனப் பயிற்சி, தியானம், உணவுக் கட்டுப்பாடு, போன்றவை ஆரோக்கியமான உடலுக்கும் மன அமைதிக்கும் வழிவகுக்கும் என்ற கருத்தினை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. முன்னுரை, கருத்துரை, முகவுரை ஆகியவற்றையடுத்து, யோகக் கலை, தியானம், யோகாசனம்-பயிற்சி, தெய்வம் எல்லோர் சித்தத்திலும் உண்டு, குழந்தை மனநலம், சூரிய நமஸ்காரம் உடற்பயிற்சி, கால் பயிற்சி, திரிகோணாசனம், சலபாசனம், புஜங்காசனம், தனுராசனம், பவனமுத்தாசனம், வஜிராசனம், சிரசாசனம், சர்வாங்காசனம், விபரிதகரணி, சாந்தியாசனம், ஒட்டியாணா, பத்மாசனம், சித்தாசனம், பிராணாயாமம், தியானம் பயிற்சி, பிறவிப் பிணி தீர்க்க மருந்துண்டு, சந்தோஷம் சம்பாதிக்கப்பட வேண்டியுள்ளது, ஆறடி நிலம் ஆகிய 25 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49533).