10345 எளியமுறை யோகப் பயிற்சி.

ஆர்.கே. முருகேசு சுவாமிகள் (மூலம்), கார்.முரளிதரன் (பதிப்பாசிரியர்). நுவரெலியா: காயத்ரிபீட வெளியீடு, ஸ்ரீநகர், 82, லேடி மக்கலம்ஸ் டிரைவ், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (சென்னை 600014: வெற்றி அச்சகம், 91, டாக்டர் பெசன்ட் சாலை, இராயப்பேட்டை).

56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே.முருகேசு சுவாமிகள் ஆன்மீகத் துறையில் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வருபவர். அவரது ஆன்மீக விளக்கங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூலுருவாகியுள்ளன. இந்நூல் உயரிய சாதனா விளக்கங்களை உள்ளடக்கியிருக்கின்றது. உண்மையான யோகம் என்பது வெறும் யோகாசனமும் பிராணாயாமமும் மட்டுமே என்ற கருத்தைக் கண்டித்து உண்மையான யோகம் என்பது எட்டு உயர் சாதனைகளைக் கொண்டது என்பதை இந்நூலில் தெளிவுபடுத்துகின்றார். அவரது இருபது பயிற்சி வகுப்புகளின் பாடத்தொகுப்பாக இந்நூல் அமைகின்றது . (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22284).

ஏனைய பதிவுகள்