நா.கந்தசாமி. அச்சுவேலி: அருண்நிலா பதிப்பகம், இடைக்காடு, 1வது பதிப்பு, 2014. (சுன்னாகம்: ராம்நெட்.கொம்).
viii, 144 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-41128-0-3.
நீரிழிவு ஒரு நோயல்ல-அது ஒரு குறைபாடே எனக்கூறும் ஆசிரியர், அதனைக் குணப்படுத்த முடியாவிட்டாலும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வழிவகைகளை இந்நூலில் விளக்குகின்றார். நீரிழிவுக்கான காரணங்கள், அறிகுறிகள், பரிசோதனைகள், நீண்டகால, குறுகியகால பக்க விளைவுகள், சிகிச்சை முறைகள் என்பனவற்றை விபரமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். உயர் குருதி அழுத்தம், குருதியில் அதிகரித்த கொழுப்புகள், நீரிழிவுடன் பின்னிப் பிணைந்த விடயங்கள் ஆகையால் அவை பற்றியும் இந்நூல் சிறப்பாக ஆராய்கின்றது. மொத்தம் 26 அத்தியாயங்களில் இவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி-இடைக்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. நாராயணபிள்ளை கந்தசாமி அவர்கள் கொழும்பு மருத்துவ பீடத்தில் உதவி மருத்துவ உத்தியோகத்தருக்கான பயற்சியை 1960இல் நிறைவுசெய்தவர். நாற்பதாண்டுகள் வைத்தியசேவையின் பின்னர் ஓய்வுபெற்றுள்ளார். உடப்பு கிராமத்தில் தனியார் வைத்திய சேவையை வழங்கி வருகிறார்.