ஏ.சந்திரசேகரம். கொழும்பு: Flower Scientific Books, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
(7), 89 பக்கம், படங்கள், விலை: ரூபா 190., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-97136-0-4.
இந்நூல் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு சிறந்ததொரு கைநூலாக விளங்கக்கூடியது. இந்நூலில் அத்தகைய ஒருவருக்கான உணவு, அன்றாட வாழ்க்கைமுறைகள் பற்றிய விரிவான குறிப்புகள் எளிய தமிழ் நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளது. உணவு, வாழ்க்கைமுறைகள் பற்றிய அறிவுரைகளைப் பின்பற்றுவதனால் முடியுருநாடி சம்பந்தமான இதய நோய்கள் (Coronary Artery Diseases). ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள இயலும். இந்நூல் அதற்கான உதவியையும் ஆலோசனைகளையும் வழங்குகின்றன. இதய நோய்கள் அறிமுகம், பொதுவான இதய நோய்கள், நெஞ்சுவலியின் போது, மாரடைப்பைத் தடுப்பதற்கான வழிமுறைகள், உணவும் இதய நோய்களும், மருத்துவத்தன்மையான உணவுப் பதார்த்தங்கள், எவ்வாறு மாரடைப்பைத் தவிர்ப்பதற்கான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது?, இதய நோய்களைத் தடுக்கும் வாழ்வியல் முறைகள், இதயத்திற்கும், உயர் குருதி அழுத்தத்திற்கும் பாவிக்கப்படும் மருந்துகள், இதய நோய்களுக்கான சோதனைகளும், அறுவை வைத்தியரின் பங்கும், மாரடைப்பின் பின்னர் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் ஆகிய பதினொரு அத்தியாயத் தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 193007).