சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 442, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆடி 2001. (யாழ்ப்பாணம்: ஹரிகரன் பிறின்ரேர்ஸ், கே.கே.எஸ்.வீதி).
69 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 15×20.5 சமீ.
இளையோர்களுக்கான பொதுவான நோய்களும் அதற்கான சித்த வைத்தியமுறைகளும் இந்நூலில் வைத்தியர் சே.சிவசண்முகராஜாவினால் விளக்கப்பட்டுள்ளன. பாலர் பருவங்கள், நோய் வரலாற்றுப் பதிவேடு, மருந்தளவு, புதிதாய் பிறந்த பிள்ளை, கிரந்தி, கரப்பன், தோஷம், கழிச்சல், சீதபேதி, மாந்தம், கணை, சுரம், அக்கரம், குடற்புழு, பாண்டு, காமாலை, வலிப்பு ஆகிய 17 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131678).