10362 மூலநோய்களும் முறையான சிகிச்சைகளும்.

இ.மங்களாம்பிகை அம்மாள். யாழ்ப்பாணம்: மங்களபதி வெளியீடு, மங்களபதி ஆயுள்வேத வைத்தியசாலையும் மருந்தகமும், 41/5 அரசவீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1994. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி, நல்லூர்).

(12), 72 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 18×13 சமீ.

மூலநோய் பல்வேறு பிற  நோய்களுக்கும் காரணமாகின்றது. மூலநோய் பற்றியும் அது ஏற்படும் காரணம், அதன் வகைகள், அந்நோய் வராமல் தடுக்கும் வழிவகைள், உணவுத் திட்டங்கள், நடைமுறை ஆரோக்கியப் பழக்கவழக்கங்கள், இலகுவான சிகிச்சை முறைகள், வைத்திய சிகிச்சைக்கான தேர்ந்த மருந்துகள், நவீனமயப்படுத்தப்பட்ட தமது மருந்துகள் எனப் பலவிதமான விளக்கங்களையும் வைத்தியர் இ.மங்களாம்பிகை அம்மாள் இந்நூலில் விபரித்துள்ளார். சுதேச வைத்திய மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் நோயின் வகைகள், நோய் எற்படும் விதம்,  ஆரம்பநிலை, நோய் நிலை, நோயின் சாத்திய-அசாத்திய நிலைகள், சிகிச்சைக் கிரமங்கள் போன்றன விபரமாக பரிபாஷைகளுடனும் விளக்கங்களுடனும் தரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 105195).     

ஏனைய பதிவுகள்

12633 – ஏட்டு மருத்துவம்(தல்பதே பிலியம் 22ஆம் தொகுப்பு).

ஆயுள்வேத திணைக்களம். கொழும்பு 8: ஆயுள்வேத திணைக்கள வெளியீடு, இல. 325, டாக்டர் எம்.எம். பெரேரா மாவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 1994. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ்). (6), 330 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: