10382 மனையியற் கலை: 9-ஆந்தரம், இரண்டாம் பாகம்.

திருமதி லே.பாலேந்திரன், இ.தர்மலிங்கம். யாழ்ப்பாணம்: ஆறுமுகம் சுப்பிரமணியம், ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆனி 1976. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி ஒழுங்கை).

vi, 178 பக்கம், அட்டவணை, விலை: ரூபா 7.75, அளவு: 21×14 சமீ.

கல்விஅமைச்சின் ஒன்பதாந்தர, தேசிய கல்வித் தராதரப் பத்திர வகுப்புக்குரிய இந்நூல் கல்வி அமைச்சின் புதிய பாடத்திட்டத்திற்கும் வழிகாட்டிக்கும் அமைவாக எழுதப்பட்டது. வழிகாட்டியிலுள்ள 5-10வரையுள்ள ஆறு அலகுகளிலுமுள்ள 18 பாடங்களுக்குரிய விடயங்கள் சாத்திரரீதியாகவும், எமது சூழலையும் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டும் இலகுவான நடைமுறையில்  இலங்கையில் கைக்கொள்வதற்கு உதவியான நாளாந்த வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வகையான செயல்முறைகளுடன் விளக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாட விடயங்களை மனதில் பதிக்கவும் மீட்டுக்கொள்ளவும் பொருத்தமாக தெளிவான விடைகள் எழுதவும் உதவியாக ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும்; பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. புடவை நார்களும் புடவைகளும், வீட்டுக்குச் சேவைசெய்யும் புடவைகள் (இல்லத் தளபாட அணிகள்), நிறைபோஷணம், குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்து ஆயத்தம் செய்ய உதவுதல், வீட்டிலிருக்கும் குழந்தையின் பராமரிப்பில் பங்குகொள்ளல், சிக்கலான சுகவீனத்தின்போது பிள்ளைகளைப் பராமரித்தல் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 25319).     

ஏனைய பதிவுகள்