அருந்ததி துரைராசா. யாழ்ப்பாணம்: அருந்ததி துரைராசா, பொன்னார் வளவு, தெல்லிப்பழை, 1வது பதிப்பு, ஆனி 2014. (கொழும்பு 6: கனவு நிலையம்).
52 பக்கம், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 375., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-50249-1-2.
1996இலிருந்து கொழும்பில் இயங்கிவரும் திவ்யா கலைக்கூடத்தின் வெளியீடுகளான தையல்கலை நுட்பம் (இரு பகுதிகள்), கேக் கலை நுட்பம், கிராமப்புற சமையல் நுட்பம் ஆகிய நூல்களைத் தொடர்ந்து ஐந்தாவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் ஊசியை எவ்வாறு பிடிக்கவேண்டும் என்பது முதற்கொண்டு கொக்கிப் பின்னல் பை வரை படிப்படியாக விளக்கப்படங்களின் உதவியுடன் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் இதில் ஊசிவகைகள், பொம்மைச் சட்டை, உங்களுக்குத் தேவையான வூூல் என்பவற்றையும் நீங்களே பின்னிக்கொள்ளலாம். சுயதொழில் செய்ய நினைப்பவர்களுக்கு உற்ற வழிகாட்டியாக இந்நூல் அமைகின்றது. இவை அனைத்தும் வகையாகு பின்னல் ஊசிகள், வலது கையால் ஊசியைப் பிடிக்கும் முறை- வலது கையால் நூலைப் பிடித்துப் பின்னும் முறை, இடது கையால் ஊசியைப் பிடிக்கும் முறை- இடது கையால் நூலைப் பிடித்துப் பின்னும் முறை, பின்னலின் வகைகள், Alice Band, Purse செய்யும் முறை, Kiw, Doll Making, Baby Sweater, Crocheting Baby Negar, Baby Socks, Baby cap, Feeding Bottle Cover, Monkey Cap, Muffler, Collar Sweater, Pullover, Over Coat ஆகிய 17 தலைப்புகளின்கீழ் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68673).