பெண்களுக்கான ஆராய்ச்சி நிலையம். கொழும்பு 5: பெண்களுக்கான ஆராய்ச்சி நிலையம், CENWOR, 225/4, கிருள வீதி, 1வது பதிப்பு, 2008. (ஹோமாகம: கருணாரத்ன அன்ட் ஸன்ஸ், 67, UDA இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், கட்டுவான வீதி).
iv, 118 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ., ISBN: 978-955-8610-35-0.
Beyond the Glass Ceiling: Participation in Decision Making in the Public Domain என்ற ஆங்கிலத் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை முகாமைத்துவ பதவிகளில் இருக்கும் பெண்களுக்கான வேலையமர்வு பாடக்கூறுகளாகும். Norwegian Church Aid என்ற அமைப்பின் நிதியுதவியுடன் இவ்வாய்வு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. முதலாவது பாடக்கூறாக ‘எமது தனிப்பட்ட மற்றும் வாண்மைசார் வகிபங்குகள் மற்றும் அவற்றை நாம் எவ்வாறு நோக்குகின்றோம்’ என்ற தலைப்பில் அக்னஸ் மென்டிஸ் மற்றும் ஷாமலா குமார ஆகியோரின் இணைவுக் கட்டுரையும், இரண்டாவது பாடக்கூறாக ‘பெண்முகாமையாளர்கள் தலைமைத்துவம் மற்றும் உதவி அளித்தல்’ என்ற தலைப்பில் கமலா லியனகேயின் கட்டுரையும், இறுதிப் பாடக்கூறாக ‘பால்நிலை, ஆளுகை மற்றும் முகாமைத்துவம்’ என்ற தலைப்பில் விஜய ஜயத்திலக்க மற்றும் மல்லிகா மனுரத்ன ஆகியோரின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. மேலதிக வாசிப்புக்காக பின்னிணைப்புப் பகுதியில் ஆய்வின் கண்டுபிடிப்புகளின் சாராம்சம் ‘கண்ணாடிக் கரைக்கப்பால்: அரச புலத்தில் தீர்மானமெடுத்தலில் பங்கு பற்றல்’ என்ற தலைப்பில் தரப்பட்டுள்ளது. சமுதாயத்தில் பால்நிலைசார் ஒப்புரவு, பெண்களுக்கெதிரான பேதங்காட்டலின் அனைத்து வடிவங்களையும் ஒழித்தல் மீதான சமவாயம், பெண்களின் பட்டயம் (இலங்கை) ஆகிய மேலதிகமான மூன்று கட்டுரைகளும் மேலதிக வாசிப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 138792).