கு.கலைச்செல்வன், க.அன்பழகன். கொழும்ப 6: க.அன்பழகன், 480/101, ரொக்சி கார்டன், 1வது பதிப்பு, மே 1997. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி).
71 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.
இந்நூல் நிறுவனங்களின் நிதியறிக்கைகளைப் பொருளுடையதாகத் தயாரிப்பதற்குப் பின்பற்றவேண்டிய கணக்கீட்டு முதன்மைகள், கணக்கீட்டு நியமங்கள் என்பவற்றை விளக்குகின்றன. உயர் வகுப்பு மாணவர்களின் பாடத் தேவையை பூர்த்திசெய்யும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. நிதிக்கூற்றுகள், இலங்கை கணக்கீட்டு நியமங்கள், இலங்கை கணக்கீட்டு நியமம் 3, வேறு முக்கிய கணக்கீட்டு எண்ணக் கருக்கள், இலங்கை கணக்கீட்டு நியமம் 5, இலங்கை கணக்கீட்டு நியமம் 8, இலங்கை கணக்கீட்டு நியமம் 9, இலங்கை கணக்கீட்டு நியமம் 10, இலங்கை கணக்கீட்டு நியமம் 12, இலங்கை கணக்கீட்டு நியமம் 15, இலங்கை கணக்கீட்டு நியமம் 18 ஆகிய 11 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 123863).