10393 ஓவிய விழி: தரம் 6 புதிய பாடத்திட்டம்.

காவலூர் இ.விஜேந்திரன். யாழ்ப்பாணம்: வின்லான்ட் புத்தகசாலை, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரின்டர்ஸ்).

vi, 58 பக்கம், ஓவியங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-51228-8-7.

சித்திர பாடத்தை தரம் 6இல் முதன்முறையாகக் கற்க வரும் மாணவர்கள் விருப்பத்துடன் தமது கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்க இந்நூல் துணைபுரிகின்றது. புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்டுள்ள இந்நூலில் பாட உள்ளடக்கம், வரைதல் நுட்பங்கள், விளக்கப்படங்கள், தவணை ரீதியான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள்கள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. ஓவியத்தின் நுட்பம் என்ற பிரிவில் வர்ணம், தூரதரிசனம், ஒளிநிழல், இரேகை, கோலம், அளவீடு, அச்சுப்பதிப்பு ஆகிய விடயங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. சமயத் தலங்களும்  அவற்றின் கட்டட அமைப்பும் என்ற இரண்டாம் பிரிவில் இந்து சமயக் கோயிலின் அமைப்பும் பண்டிகையும், பௌத்த சமய விகாரையின் அமைப்பும் பண்டிகையும், கிறிஸ்தவ சமய ஆலயத்தின் அமைப்பும் பண்டிகையும், இஸ்லாமிய பள்ளிவாசலின் அமைப்பும் பண்டிகையும் ஆகிய விடயங்கள் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன. மூன்று முதல் ஆறு வரையிலான அத்தியாயங்களில் முறையே விளக்கப்படங்கள், வரைதல் நுட்பங்கள், தவணைரீதியான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள்-விடைகளுடன் என்பன இடம்பெற்றுள்ளன. மொத்தம் ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. துறைரீதியான கற்றல்-கற்பித்தல் அனுபவம், சித்திரப்பாட நூல்களை தரம் 6 முதல் 13 வரை எழுதி தொடர்ச்சியாக வெளியிட்டுவந்த அனுபவம் ஆகியவை ஆசிரியரின் இந்நூல் தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்துள்ளன. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 10085). 

ஏனைய பதிவுகள்