10396 இசைமுத்துக்கள்.

பவானி லோகேந்திரம். யாழ்ப்பாணம்: திருமதி பவானி லோகேந்திரம், முன்னாள் இசை ஆசிரியை, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (கொழும்பு 6: Fast Printers, 289-1/2 காலி வீதி, வெள்ளவத்தை).

100 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

1977இல் இசைக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட நூலாசிரியர், யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவியாவார். அதே கல்லூரியில் 1984-2010 காலகட்டத்தில் இசை ஆசிரியையாகப் பணியாற்றியவர். தனது மூன்று தசாப்த கால இசைச்சேவையை மையப்படுத்தி இந்த இசை முத்துக்கள் தொகுப்பினையும் இறுவட்டையும் இணைத்து வெளியிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56399).

ஏனைய பதிவுகள்