ஸ்ரீ தர்ஷனன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 94 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-469-0.
கர்நாடக இசை பழமையானதாயினும் அதனைக் கற்பிக்கும் யுக்திகளும், இசைக்கும் முறைகளும் காலத்தின் தேவைக்கேற்றவகையில் முன்னேற்றப்படுவதும் பயனாளிகளான மாணவர்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தும் முகமாக மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதும் காலத்தின் இன்றியமையாத தேவையாகின்றன. இதனைச் சரியாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், இலங்கை உயர்கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன கல்விக் கொள்கைகளை கர்நாடக இசையில் பயன்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும், அவ்வாறு பயன்படுத்தாவிடில் கர்நாடக இசையுலகுக்கு ஏற்படவிருக்கும் இழப்புப் பற்றியும், அக்கொள்கைகளைப் பொருத்தமான முறையில் பின்பற்றி கர்நாடக இசைப் பாடத்திட்டங்களை மீளமைப்பது பற்றியும் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் அனுபவித்து உணர்ந்த எளிமையான உதாரணங்கள் மூலம் விளக்குவதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பயனை அடிப்படையாகக் கொண்ட இசைக்கல்வி முறை, குருகுலவாச முறையின் நன்மைகள், பயிலுநரை மையமாகக் கொண்ட கல்விமுறை, இசைத்திறன்கள், பல்கலைக்கழக இசைக்கல்வி, இசைக்கல்வியிலே மாற்றங்கள் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி ஸ்ரீ தர்ஷன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராகப் பணியாற்றுகின்றார். தனது இசைத்துறை இளநிலைப்பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், இசை முதுநிலைப்பட்டம் மற்றும் இசை முது தத்துவமாணிப் பட்டங்களைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் முதற்பிரிவுத் தேர்ச்சியுடன் நிறைவுசெய்தவர். இசை மருத்துவத்தில் கலாநிதிப்பட்ட ஆய்வினை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தவர். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68617).