சி.மகேந்திரன். யாழ்ப்பாணம்: இசைத்துறை, இராமநாதன் நுண்கலைக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (வவனியா: பொய்கை பதிப்பகம்).
xxxiii, 267 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 600., அளவு: 26×20.5 சமீ., ISBN: 978-955-41813-0-4.
ஆடற்கலையின் மிக நுட்பமான ஜதிக் கோர்வைகளின் வேறுபாடுகளைத் துல்லியமாக வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கு தோற் கருவிகள் சிறந்த முறையில் பங்காற்றுகின்றன. பரத நாட்டிய இசை மரபில் பல தோற்கருவிகள் மற்றும் இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றுள் மிருதங்கமானது சிறப்பிடம் பெற்றுள்ளதை இந்நூல்வழி புரிந்துகொள்ள முடிகின்றது. யாழ்.பல்கலைக்கழக மிருதங்க இசை சிரேஷ்ட விரிவுரையாளர் லயஞானவாரிதி கலாநிதி சி.மகேந்திரன் இந்நூலின் ஆசிரியராவார். இவரது ‘தொன்மைச் சான்றுகள் புலப்படுத்தும் ஆடலமைதி’ ‘பரதத்தில் மிருதங்க இசைமரபு’ ஆகிய இரு நூல்களுக்கான வெளியீட்டு விழா 23.05.2015 அன்று யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.(இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1001427).