சி.மௌனகுரு. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
1998இல் வெளிவந்த பேராசிரியர் சி.மௌனகுருவின் ‘மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்’ என்ற நூலின் மீள்பதிப்பு 2014இல் வெளிவந்தது. இவ்விரண்டாம் பதிப்பிற்கான முன்னுரையை ஆசிரியர் அஞ்சலோட்டம்: உற்ற ஒருவரைத் தேடுகிறேன் என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தார். இரண்டாம் பதிப்பின் இவ்விரிவான முன்னுரை ‘அஞ்சலோட்டம்’ என்ற தலைப்பில் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 1998இல் இவரால் வெளியிடப்பட்ட இப்பாரிய ஆய்வுநூலின் வருகைக்குப் பின்னரான 16 ஆண்டுகளில் இரண்டாம் பதிப்பு வெளியிடும் காலம் வரையிலான கலைத்துறை மாற்றங்கள், அனுபவங்கள், எண்ணங்கள் பற்றி இம் முன்னுரையில் பேராசிரியர் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.